This is an archived site. Visit the current website at bookcouncil.sg.

கவிதைக்கான நீதிபதிகள்

KTM Iqbal

க.து.மு.இக்பால் (தலைமை நீதிபதி)

க.து.மு.இக்பால் பதினைந்து கவிதை நூல்களின் ஆசிரியர்.
சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தின் “பாடிப் பழகுவோம்“ என்னும்  நிகழ்ச்சிக்காக 200க்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பெருவிரைவு வண்டிகளில் 1995ல் வலம் வந்த இவருடைய “தண்ணீர்” என்னும் கவிதை, ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ 2000 (EXPO 2000) என்னும் கண்காட்சியிலும் இடம்பெற்றது. இவர் பெற்ற விருதுகளில் “தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது” (2001), சிங்கப்பூர் அரசு வழங்கிய கலாசார விருது  (2014) ஆகியவை அடங்கும்.

KTM Iqbal (Chief Judge)

KTM Iqbal is the author of fifteen poetry books. He has written more than 200 children's songs for the Singapore Broadcasting Corporation's Paadi Pazhaguvom (Let Us Sing) programme. His poem Thanneer (Water), which was displayed on SMRT trains in 1995, was featured in the EXPO 2000 exhibition in Hanover, Germany. His awards include the S.E.A Write Award (2001) and the Cultural Medallion (2014).

Karuppasamy Samayavel

கருப்புசாமி சமயவேல்

கவிஞர் சமயவேல் தமிழகத்தின் மூத்த கவிகளில் ஒருவர்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு “காற்றின் பாடல்” 1987ல் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, 
இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “விளக்கு” அமைப்பு வழங்கும் “புதுமைப்பித்தன்” விருது, ஆனந்த விகடனின் “நம்பிக்கை”
விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். 1957ல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தற்சமயம் மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொடர்ந்து கவிதைகள் எழுதும் இவர், மொழிபெயர்ப்பாளராகவும் செயல்படுகிறார்.

Karuppasamy Samayavel

Poet Samayavel is one of the senior poets in Tamil Nadu. His first collection of poems, Kaatrin Paadal (Songs of the Wind) attracted wide attention. He has published a total of seven poetry collections, one short story collection, two essay collections, and two translations of poetry collections. He has received the Puthumaippithan award and the Nambikkai award. He lives with his family in Madurai and continues to write poems, working as a translator.

Dr M S  Shri Lakshmi

எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி

முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம், மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துக்காகப் பாடங்கள் எழுதியவர். இலக்கியத்துறையில் இவருக்கு உள்ள நுண்மாண் நுழைபுலம், விரிவான ஆழமான ஆய்வுப்பணி, கற்பிக்கும் பணியில் இவருக்கு உள்ள ஆழ்ந்த அனுபவம் ஆகியவை காரணமாக இவர் தமிழில் தகைசால் அறிஞராக மதிக்கப்படுபவர். இவர் சிங்கப்பூர், மலேசிய, தமிழ்நாட்டுத் தமிழ் இலக்கியங்களை ஆய்வுப்பொருண்மையாகக்கொண்டு முப்பது நூல்களையும் தொண்ணூற்று ஏழுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இவர் தம் ஆய்வுகளை  நூலாகப் பதிப்பிக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். தேசிய நூலக வாரியத்தால் நடத்தப்படும் “வாசிப்போம் சிங்கப்பூர்” நிகழ்சிக்காகச் சிங்கையில் எழுதப்பட்டுள்ள மலாய்மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் இவர் தமிழ் இலக்கியத்திற்கு  வட்டாரமணம் சேர்த்துள்ளார்.

Dr M S Shri Lakshmi

Dr M S Shri Lakshmi has worked as a lecturer in Singapore University of Social Sciences, National Institute of Education, Nanyang Technological University, and the Department of Indian Studies at the University of Malaya. With extensive research and vast experience in teaching Tamil language and literature, she has authored over 120 books and papers and has translated Malay stories to Tamil for the National Library Board’s Read Singapore Programme.