This is an archived site. Visit the current website at bookcouncil.sg.

புதினதிற்க்கான நீதிபதிகள்

Kanagalatha

கனகலதா (தலைமை நீதிபதி)

கனகலதா (லதா), "தீவெளி" (2003), "பாம்புக் காட்டில் ஒரு தாழை" (2004), "யாருக்கும் இல்லாத பாலை" (2016) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் “நான் கொலை செய்யும் பெண்கள்” என்னும் சிறுகதைத் தொகுப்பு 2008ல் சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.

ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிங்கப்பூர் கவிதை விழா’ எனும் அமைப்பின் நிறுவன இயக்குனர்களில் ஒருவர். லதா தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

Kanagalatha (Chief Judge)

Kanagalatha (Latha) has published three poetry collections, Theeveli, Paambu Kaatil Oru Thaalai, and Yaarukum Illatha Paalai (Milk for Nobody). Her short story collection, Nan Kolai Seyium Penkkal won the Singapore Literature Prize. Latha’s poetry has been published in Singapore’s multilingual anthologies and in prestigious international literary magazines. Her works have been translated into English, French, and German. She is one of the founding directors of Poetry Festival Singapore. Kanagalatha is currently the Associate Editor at Tamil Murasu.

Era Murukan

இரா.முருகன்

இரா. முருகன் (முருகன் ராமசாமி) முன்னாள் கணினித் தொழில்நுட்ப நிர்வாகியாவார். இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நாடக, திரைக்கதை ஆசிரியர் மற்றும் பத்திரிகை எழுத்தாளராக இருக்கிறார். இவர் மலையாளம் – தமிழ் – ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். எட்டு நாவல்களும், சிறுகதை, புனைவு அல்லாதவை, கவிதைத் தொகுப்புகள், தமிழில் தொழில்நுட்ப எழுத்து என நாற்பது இதர தொகுப்புகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

Era Murukan

Era Murukan (Murugan Ramasami) is a former information-technology-professional. Today, he is a Tamil and English novelist, short story writer, poet, playwright, screenplay writer, and columnist. He is also a translator across the Malayalam, Tamil, and English languages. He has authored eight novels and over 40 other collections of short stories, prose nonfiction, poetry, and Tamil digital writing.

Mohamed Kassim Shanavas

முகமது கஸிம் ஷனாவாஸ்

முகமது கஸிம் ஷனாவாஸ் ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளர். இவரது “சுவை பொருட்டன்று” என்னும் கவிதை நூல் ஆங்கிலத்தில்.
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் ஒரு பல்துறை கட்டுரையாளர். இவரது தலைசிறந்த படைப்பான, "அயல் பசி" தெளிவான மற்றும் விவரமான கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இவரது “மூன்றாவது கை” சிறுகதை தொகுப்பு 2014 சிங்கப்பூர் இலக்கிய பரிசை வென்றது.
இவரது கட்டுரைத் தொகுப்பு “நனவு தேசம்” 2016 சிறப்பு இலக்கிய பரிசை வென்றது. இதுவரை இரண்டு சிறுகதை தொகுப்பு நூல்களும், 5 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். தற்போது சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் ஆசிரியராக பணிப்புரிகிறார்.

Mohamed Kassim Shanavas

Mohamed Kassim Shanavas is a poet and short story writer. His poetry collection Suvai Poruttandrru has been translated into English. He is a versatile essayist. His masterpiece, Ayal Pasi is a collection of vivid essays. His short story collection Moonravathu Kai received the Singapore Literature Prize commendation, and his Nanavu Desam was awarded the SG50 Commendation Literature Prize. He has written two short story and five essay collections. He is chief editor of Serangoon Times Monthly Magazine.