This is an archived site. Visit the current website at bookcouncil.sg.

இலக்கியப் புதினம் அல்லாதவைக்கான நீதிபதிகள்

Sivakumaran S/O Ramalingam

ஆ ரா சிவகுமாரன் (தலைமை நீதிபதி)

இணைப் பேராசிரியர், டாக்டர் ஆ ரா சிவகுமாரன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர்.

சிங்கப்பூர்க் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களின் மதியுரைஞராகப் பணியாற்றியவர். தேசியக் கல்விக் கழகத்தின் நல்லாசிரியர் விருதை ஆறு முறைகள் பெற்றவர். சிங்கப்பூரின் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி முனைவர் (PhD) பட்டம் பெறுவதற்கு முதன் முதலில் வழி வகுத்தவர், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியாகவும், பேராசிரியர்களோடு இணைந்தும், பதிப்பாசிரியராகவும் இருந்து 16 புத்தகங்களை வெளியிட்டவர். அமெரிக்கா, ஜெர்மனி, கனடா முதலிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் புரவலர். சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டின் துணைத் தலைவர்.

Sivakumaran S/O Ramalingam (Chief Judge)

Dr A Ra Sivakumaran, former head of the Tamil Language Division at NIE-NTU, was a consultant for publishing Tamil textbooks from 2006 to 2019. He received the NIE Excellent Teacher Award six times, and was the first person to receive a PhD for research on Singapore Tamil Literature. He has authored and co-authored 16 books and presented papers at international conferences. He is a patron of the Singapore Tamil Teachers Union and vice president of the Singapore Thirumurai Organising Committee.

Maunaguru Sidharthan

மௌனகுரு சித்தார்த்தன்

முனைவர் மௌனகுரு சித்தார்த்தன் அவர்களின் ஆராய்ச்சி, பல தள களப்பணியில் கவனமுடையது. அவரின் ஆராச்சி மானுடவியல், வரலாறு, தத்துவம் போன்ற துறைகளின் தழுவல்களை உள்ளடிக்கியது. முனைவர் மௌனகுரு தற்போது தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில், தெற்கு ஆசிய ஆய்வுகள் எனும் பட்டப்படிப்பின் துணை பேராசிரியராக பணிபுரிகிறார்.

Maunaguru Sidharthan

Dr Maunaguru Sidharthan’s research focuses on multi-sited fieldwork that intersects with the disciplines of anthropology, history and philosophy. He is currently an Assistant Professor at the National University of Singapore in the South Asian Studies programme.

Yuvan Chandrasekar

யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பட்டி என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் கவிதை, நாவல் போன்ற பல இலக்கிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தீரா பகல்", "ஒற்றறிதல்" மற்றும் "வேதாளம் சொன்ன கதை" போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். தற்போது, யுவன் தன் மனைவியுடனும் இரு பிள்ளைகளுடனும் சென்னையில் வசிக்கிறார்.

Yuvan Chandrasekar

Yuvan Chandrasekar was born in Karattuppatti, a small village in the Madurai District of Tamil Nadu. He has published a range of works including poetry and novels. Many of his works have been translated into other Indian languages and English. His notable works include Theeraa Pakal (Never-ending Daytime), Otrarithal (Espionage), and Vedhalam Sonna Kadhai (Story Told by a Phantom). He now lives in Chennai with his wife and two children.