கவிதை - தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
மேலும் அறிய, புத்தகத்தை 'கிளிக்' செய்யவும்
ஏற்றம் அளித்த இருநூறு
அ. கி. வரதராசன்
ஏற்றம் அளித்த இருநூறு
1819-2019 என்னும் இருநூறு ஆண்டு காலக் கட்டத்தில் சிங்கப்பூர் நாடு கண்ட ஏற்றம் குறித்து விவரிக்கும் நூல் இது. சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இருநூறு ஆண்டுக்கால கட்டக் கொண்டாட்டத்தை மனத்தில் வைத்து இந்த நூல் எழுதப்பட்டது. கல்வி, சாங்கி விமான நிலையம் ஆகிய இரண்டு துறைகளில் இந்நாடு கண்ட முன்னேற்றம் பற்றிப் புகழ்ந்து கூறும் 200 பாடல்கள் கொண்ட நூல் இது.
முறையான கல்வித் திட்டம் இந்த இருநூறு ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியையும் சிங்கப்பூரின் பல விமான நிலையங்கள் பற்றியும் அவை எவ்வாறு இறுதியில் உலகத்தின் முதல்தர விமான நிலையம் என்ற பெருமையைத் தாங்கி நிற்கும் சாங்கி விமான நிலையமாக உருவெடுத்தன என்பது குறித்தும் பேசும் மரபுக் கவிதை –அறு சீர் விருத்தம்- பாடல்களைக் கொண்ட நூல் இது.
Growth of 200 (years)
Growth of 200 Years describes the rise of Singapore from 1819 to 2019. Written as part of Singapore’s bicentennial celebrations, the book has two hundred verses, recounting the nation’s significant triumphs in two examples, education and Changi airport. The book contains poems that trace the growth of formal education over two hundred years and recalls the development of various airports in Singapore, culminating in Changi Airport attaining its top international reputation.
இத்தாலியனாவது சுலபம்
சித்துராஜ் பொன்ராஜ்
இத்தாலியனாவது சுலபம்
“இத்தாலியனாவது சுலபம்” சிங்கப்பூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்-இன் 80 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. உலகமயமாகிவரும் சூழலில் தனது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் சிங்கப்பூர் தமிழர்களின் முன் நிற்கும் சவால்களை இக்கவிதைகள் பல கோணங்களிலிருந்து ஆராய்கின்றன. இந்த அலசலைச் செய்யும் விதத்தில் இத்தொகுப்பின் கவிதைகள் மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைத் தமக்குள் நிலை நிறுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் கவிதைகளில் பழக்கமாக்கிவிட்ட சித்திரங்களையும் உத்திகளையும் தள்ளி தமக்கென்று புதிய உத்திகளையும் சொல்லாடல்களையும் அமைத்துக் கொண்டுள்ளன. இத்தொகுப்பின் தலைப்பே சிங்கப்பூர் போன்ற பன்னாட்டு, பல கலாச்சாரச் சூழலில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் அடையாளச் சவால்களைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. தனது மொழி, தனது கலாச்சாரம் என்ற பிணைப்பு உள்ளவனக்குக் கூட இணையம் வேறொரு அடையாளத்தை உடுத்திக் கொள்ளும் வாய்ப்பை எளிதில் வழங்குகிறது. இத்தகைய சூழலில் விருப்பம் இருந்தால் சந்தேகமே இல்லாமல் யாரும் இத்தாலியனாவது சுலபம்தான்.
It is Easy to be an Italian
It is Easy to Be An Italian is a collection of 80 poems by Sithuraj Ponraj in Tamil. The poems seek to explore the various aspects and challenges associated with preserving one's own Singaporean Tamil culture and identity in an increasingly interconnected global environment. To do this, the poems in this collection break away from images and forms traditionally used in Tamil poetry while retaining a strong connection to purity of the language shaped by the three millennia of Tamil literature. The title of the collection reflects the tension that exists in the hearts of many Singaporeans - a deep sense of one's own culture, and yet the possibility of accessing online communities where one can be something else altogether if one chooses. A world where indeed it is easy to be Italian or anyone else you choose to be.
கடலெனும் வசீகர மீன்தொட்டி
சுபா செந்தில்குமார்
கடலெனும் வசீகர மீன்தொட்டி
இந்த கவிதைத் தொகுப்பு மிக அடர்த்தியான கருப்பொருளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் சொல்லவரும் கருத்துகளைக் காட்சிப்படுத்தும் விதம் பிரம்மிப்பை ஏற்படுத்தும். தொகுப்பில் உள்ள கவிதைகள் தனிமை, பிரிவு, ஏக்கம், அயல்நாட்டு வாழ்க்கை, தவிப்பு, வலிகள், ஆசைகள், காதல், சமூக அவலங்கள் மற்றும் இயற்கை என்று பல திசைகளில் விரிகின்றன. இயற்கையையும், அழகியலையும் மட்டுமே இல்லாது சமகால வாழ்வில் இருக்கும் அரசியலையும் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
A Magical Aquarium Called The Ocean
A Magical Aquarium Called the Ocean was built on a deep message. These poems have a powerful way of visualising and bringing their content to life. The themes of the collection include loneliness, distance, longing, migration, desperation, pain, desire, love, social awareness, and nature. These poems not only talk about nature and beauty, but also explore the politics of our daily routines.