இலக்கியப் புதினம் அல்லாதவை - தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
மேலும் அறிய, புத்தகத்தை 'கிளிக்' செய்யவும்
என்னோடு வந்த கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ
என்னோடு வந்த கவிதைகள்
எழுத்தாளரின் பயணத்தைப் பற்றிய கவிதை மற்றும் கட்டுரைகளின் தொகுப்பான "என்னோடு வந்த கவிதைகள்", கவிதையின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கவிதை நம்மை எவ்வாறு ஈர்க்கிறது என்பதை ஆராய்கிறது. இது புகழ்பெற்ற கவிஞர்களுடனான சந்திப்புகளின் தாக்கத்தையும், ஒரு கவிஞரின் பரிணாமத்தையும் ஆராய்கிறது. இது கவிதையின் வளர்ச்சியை கவிஞருடன் இணைத்து, செயல்பாட்டில் பெறப்பட்ட அறிவையும், கல்வியறிவையும் பகிர்ந்து கொள்கிறது. வளரும் கவிஞர்களுக்கான ஒரு உந்துதல் புத்தகம், இது பீலே ஒரு நோபல் பரிசு பெற்ற நைஜீரிய கவிஞரை சந்தித்த படங்களைக் கவிஞர்களின் வளர்ச்சியையும் ஆராய்கிறது.
Poems which Travelled with Me
Ennodu Vantha Kavithaigal (Poems Which Travelled with Me), is a collection of poetry and articles about the author’s travel, exploring poetry’s special features and how it attracts us. It examines the impact of meetings with eminent poets and a poet’s evolution. It combines the development of poetry with the poet, sharing gained knowledge and literacy. A motivational book for upcoming poets, it features pictures of Pele meeting a Nobel Laureate Nigerian poet and explores the development of poetry.
கம்பனின் இராமன் மானுடனா மாலவனா?
அ. கி. வரதராசன்
கம்பனின் இராமன் மானுடனா மாலவனா?
இந்த புத்தகத்தில், கம்பனின் திறமைகளும், அவரது கதாபாத்திர உருவாக்கத்தில் அவர் காட்டும் ஒப்பற்ற நேர்த்தியும் ஆராயப்படுகின்றன. அதில், காப்பியநாயகன் ராமரை அவரது காவியம் கம்ப ராமாயணத்தில் ஒரு சாதாரண மனிதனாக சித்தரிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. ராமரின் செயல்களை கம்பன் எவ்வாறு தெய்வீக தன்மையின் வெளிப்பாடாக அல்லாமல், மாறாக பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு சராசரி மனிதனினுடையது என இப்புத்தகம் விளக்குகிறது. அகில இளங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் மார்ச் 2018 இல் இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Is Kamban’s Rama, a Human or a Maalavan?
In this book, the skills of Kamban and the elegance he shows in his character creation are examined, focusing on his portrayal of the hero Rama as a normal human in his epic Kamba Ramayanam. The book explains how Kamban has presented the actions of Rama not as an expression of divine character, but of an average human in various situations. The book was launched at the Kamban Festival by the International Sri Lankan Kamban Society in March 2018.
சிங்கப்பூர்-மலேசியா: தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம்
சுப்ரமணியன் பாலபாஸ்கரன்
சிங்கப்பூர்-மலேசியா: தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம்
ஒன்பது கட்டுரைகள் மற்றும் ஆறு நேர்காணல்கள் மூலம், சிங்கப்பூர் மற்றும் மலாயாவின் தமிழ் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பயணம் மற்றும் அவர்களின் படைப்புகளைப் பற்றி, இந்த புத்தகம் சொல்கிறது. இரண்டாம் உலகப் போரும் அதன் ஜப்பானிய ஆக்கிரமிப்பும் நமது எழுத்துப் பாதையை எவ்வாறு திருப்பியது என்பதையும், ஜப்பானிய ஆட்சியின் கீழ், சிங்கப்பூரில் எழுதப்பட்ட இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ஏராளமான தமிழ் சிறுகதைகளுடன், பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கோலாலம்பூரில் வெளியிடப்பட்டதையும் இது ஆராய்கிறது. நாராயணரின் இலக்கியப் படைப்பின் முதல் முழு சித்தரிப்பு இதுவாகும்.
Singapore-Malaysia : A History of Tamil Literature - Some Turning Points
Through nine essays and six interviews, this book chronicles the works and lives of Singapore and Malaya’s Tamil writers and journalists. It explores how World War II and Japanese aggression turned our writing trajectory around, and examines banned books that were translated to Tamil and published in Kuala Lumpur, alongside numerous Tamil short stories that were written in Singapore during the Japanese occupation describing India’s fight for independence. It is the first full depiction of the literary work of Narayanar.
சிறுகாட்டுச் சுனை
அழகுநிலா
சிறுகாட்டுச் சுனை
சிங்கப்பூரை அறியாதவர்களுக்குக் களிநயத்தோடு கூடிய புதிய தகவல்களையும், பல்லாண்டுகளாக இங்கேயே வாழ்பவர்களுக்கு அவர்கள் அனேகமாகப் பெயரளவில் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தைக் குறித்துச் செறிவுள்ள தகவல்களையும் நிதானமான பார்வைகளையும் வழங்குபவை இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவமிக்கவை மற்றும் அவற்றின் சாராம்சம் வாசிப்பவர்களின் நினைவில் நீண்டிருக்கும். இந்நூல் அளவிற் சிறியது என்றாலும் சரளமான வாசிப்பின் பத்துக்கும் தீர்க்கமான சிந்தனைகளுக்குமான புதையல் வீடு.
Sirukattu Chunai
This collection of articles provides refreshing new information for those who do not know Singapore and a wealth of information and insights into the country and its people. Every article is unique, and their essence will linger in the memory of the reader. Though it is a slim volume, it is a treasure house of fluid reading and well delineated thoughts.
வாழைமர நோட்டு
வ ஹேமலதா
வாழைமர நோட்டு
‘வாழைமர நோட்டு’ சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது நடந்த நிகழ்வுகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த புத்தகம், ஜப்பானிடம் சிங்கப்பூரின் வீழ்ச்சி, அது இறுதியில் சரணடைதல் மற்றும் சிங்கப்பூரின் வாழ்க்கையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. பிற இனத்தவர்களும் உட்பட, சீனர்கள் ஜப்பானியர்களின் வெறித்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். ஏழ்மையும் உணவுப் பஞ்சமும் சிங்கப்பூரைப் பீடித்தது. ஜப்பானிய ஆதரவுடன் ஐ.என்.ஏ செழித்தது, அதே நேரத்தில் ஃபோர்ஸ் 136 இயக்கம் ஜப்பானியர்களுடன் போராட தோன்றியது. ஜப்பான் இறுதியாக நேச நாடுகளிடம் சரணடையும் வரை, நிகழ்ந்த நிகழ்வுகள் உலகளாவிய போக்குகளை மாற்றின.
Banana Money
Vazahaimara Nottu (Banana Money) is a collection of articles about the Japanese occupation of Singapore. The book narrates Singapore’s fall to Japan and the dramatic changes to lives in Singapore that followed. Local Chinese were subjected to Japanese wrath, as were other races. Poverty and food shortages plagued Singapore. The INA flourished with Japanese support, while Force 136 movement emerged to fight the Japanese. The events that followed changed global trends until Japan’s surrender to the Allies.